தமிழ் சினிமாவின் போக்கு எப்படி இருக்கும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
தமிழ் சினிமாவின் போக்கு வளமாக இருக்கும். பிரம்மாண்டங்கள் குறைய ஆரம்பிக்கும். எதார்த்தங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். எதார்த்தமான நடிப்பு, எதார்த்தமான வசனங்கள், எதார்த்தமான கதை என சினிமாவின் போக்கு எதார்த்தத்தின் பக்கம் திரும்பும்.
தமிழ் சினிமாவுக்கு இது முன்னேற்றமான காலம் என்று சொல்லலாமா?
ஆம். முன்னேற்றமான காலம் என்றும் சொல்லலாம். சினிமாவின் போக்கு புதிய பாதையில் போகும் என்றும் சொல்லலாம்.
நிறைய மாற்றங்கள் நிகழும். நவீனத்தில் இருந்து மாறி எதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, எதார்த்தத்தோடு கூடிய நவீனத்துவத்தை சினிமாவில் கொண்டு வருவார்கள்.