Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29

Advertiesment
மார்ச் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29
, வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (14:54 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கால் வலி, கழுத்து வலி குறையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் முன்மொழியப்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

வீடு கட்ட அப்ரூவலுக்கு அனுப்பியிருந்த கட்டிட வரை படத்திற்கு முறைப்படி அனுமதி கிடைக்கும். ஆனாலும் சில நேரங்களில் சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்பட்டு வீராவேசத்துடன் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள்.

பழைய கசப்பான சம்பவங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து மனைவி வழியில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். உயர்கல்வியில் நாட்டம் கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.

வேற்றுமதத்தவர் நண்பர்களாவார். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. ஆடை அணிகலன்கள் சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். வேலையாட்கள் எதிர்த்துப் பேசுவார்கள்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 2, 7, 11, 15, 20
அதிர்ஷ்ட எண்கள் : 1, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, சனி

Share this Story:

Follow Webdunia tamil