Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31

பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31
, வியாழன், 31 ஜனவரி 2013 (16:18 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காரியங்கள் சிறப்பாக முடியும். என்றாலும் சில நேரங்களில் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சில முக்கிய விஷயங்களையெல்லாம் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

இடைத்தரகர்களை நம்பி பணத்தை தந்து விட்டு ஏமாற வேண்டாம். மையப்பகுதியிலிருந்து பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. வேலைக் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

புதியவர்கள் நண்பர்களாவார்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டுவீர்கள். ஆனால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கும் கை, கால் வலிக்கும். மனைவிவழியில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். காதல் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். உத்‌தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். நெடுநாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 1, 8, 17, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், சிவப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil