Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 5, 14, 23

பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 5, 14, 23
, வியாழன், 31 ஜனவரி 2013 (16:14 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஆனால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். ஒருத்தருக்கொருத்தர் போட்டிமனப்பான்மை, தாழ்வுமனப்பான்மை இருக்கும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள்.

பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். பெரியளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஓரளவு மகிழ்ச்சி, பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்களால் பயடைவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும்.

கன்னிப் பெண்களே! எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்‌தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சகிப்புத் தன்மையால் சாதித்துக் காட்டும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 14, 15, 23, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம்வெள்ளை, ஊதா
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

Share this Story:

Follow Webdunia tamil