Religion Astrology Numerology 1301 31 1130131043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 7, 16, 25

Advertiesment
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 7
, வியாழன், 31 ஜனவரி 2013 (16:07 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் பணவரவு உண்டு. விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.

மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். மூத்த சகோதர வகையில் பிணக்குகள் வரும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

அரசு காரியங்கள் இழுபறியாகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். உறவினர், நண்பர்களின் வருகை அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டங்கள் நீங்கும். கொஞ்சம் சேமிக்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். ஆனால் செலவுகள் இருக்கும். வாகனம் பழுதாகி சரியாகும்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப்பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.

வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மேலதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டை பெறுவீர்கள். நாலும் தெரிந்த நல்லவர்களின் வழிகாட்டுதலால் இலக்கை தொடும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 6, 16, 11, 15, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 4
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil