8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். ஆரோக்யம் கூடும். சிக்கல்கள், பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். என்றாலும் வேலைச்சுமை ஒருபக்கம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் உத்தியோகத்தில் இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி முன்னேறும் சக்தியும் உண்டாகும்.
தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனவருத்தம் வந்துப் போகும். யாராக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளால் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள்.
வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் படைப்புகள் பலராலும் பாராட்டப்படும். பழைய பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 5, 8, 23, 24
அதிர்ஷ்ட எண்கள் : 2, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி