Religion Astrology Numerology 1211 29 1121129042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிச‌ம்ப‌ர் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29

Advertiesment
டிசம்பர் மாத எண் ஜோதிடம் 2
, வியாழன், 29 நவம்பர் 2012 (19:51 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த பணம் வரும். கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும். மனஇறுக்கம் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய வழி பிறக்கும். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டாலும் பல நேரங்களில் அறிவுப் பூர்வமாக முடிவுகள் எடுப்பீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். முன்கோபம், பல், கண் வலி நீங்கும். ஆனால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தடைப்பட்டு முடியும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது இழுபறியாகி முடியும். வாகனம் பழுதாகும். உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம்.

கன்னிப் பெண்களே! புது நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்‌தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 6, 11, 16, 15
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மஞ்சள்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil