Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிச‌ம்ப‌ர் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

டிச‌ம்ப‌ர் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30
, வியாழன், 29 நவம்பர் 2012 (19:45 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

சகோதரர் புரிந்து கொள்வார். அழகு, அறிவுக் கூடும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பழைய பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். வேற்றுமதத்தவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள்.

குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனம் அடிக்கடி பழுதாகி சரியாகும். ஆனால் வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். முதுகு வலி, தலை வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை. கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். தன் பலவீனத்தை சரி செய்து கொள்ள வேண்டிய மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 9, 10, 21, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மயில்நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil