4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்கள், நண்பர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நிர்வாகத் திறன் கூடும். சகோதரர் மனம் விட்டு பேசுவர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். திடீர் பயணங்கள் உண்டு. புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். பூர்வீகச் சொத்தில் கூடுதலாக செலவு செய்து அதை சீர்திருத்தம் செய்வீர்கள். மையப்பகுதியிலிருந்து வீண் செலவு, தூக்கமின்மை, மனஇறுக்கம், கழுத்து, முதுகு வலி வந்து நீங்கும். பெற்றோரின் உடல் நலம் பாதிக்கும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.
கன்னிப் பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைக்க வேண்டிய மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 4, 8, 17, 26
அதிர்ஷ்ட எண்கள் : 1, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்