5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பாராத வெற்றி கிட்டும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள்.
மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சோர்வு, களைப்பு நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கவுரவப் பதவிகள் தேடி வரும். சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! மறதி, மந்த நிலையிலிருந்து விடுபடுவீர்கள்.
கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 5, 8, 14, 26
அதிர்ஷ்ட எண்கள் : 4, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்