6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்கள் கை ஓங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புது வேலை அமையும்.
பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளால் நன்மை உண்டு. திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
புது வாகனம் வாங்குவீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து பிரச்சனைகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.
முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி புகழ்வார். கலைத்துறையினர்களே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 6, 8, 13, 14, 17
அதிர்ஷ்ட எண்கள் : 2, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி