7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சோம்பல் நீங்கி, உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். பணத்தட்டுப்பாடு குறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த சந்தேகம் நீங்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்.
உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். வாகனப் பழுது நீங்கும். நட்பு வட்டம் விரியும். ஆனால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அரசு விஷயங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். யாருக்காகவும் ஜாமீன் கையப்பமிட வேண்டாம். உடல் உஷ்ணம், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும்.
சொத்து விஷயத்தில் கறாராக இருங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். நெருக்கடிகளிலிருந்து விடுபடும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 6, 7, 11, 16, 24
அதிர்ஷ்ட எண்கள் : 1, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், ரோஸ்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்