8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வீண் டென்ஷன் விலகும். சொத்து சிக்கல் சுமூகமாக முடியும். இருந்தாலும் என்றாலும் சகோதர வகையில் சிறுசிறு மனக்கசப்புகள் வந்துப் போகும். வாகனம் தொந்தரவு தரும். எதிர்பாராத திடீர் பயணங்கள், செலவினங்கள் வந்துச் செல்லும். புண்ணியத் தலங்கள் செல்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. மனைவிக்கு அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை வந்துப் போகும்.
புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அனாவசியமாக வீட்டிற்கு யாரையும் அழைத்து வர வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவமளியுங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களைப் பற்றியோ, மேலதிகாரிகளைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கலைத் துறையினர்களே! உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8, 23, 24
அதிர்ஷ்ட எண்கள் : 4, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, மிண்ட்கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், சனி