9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புது வேலைக் கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும். எதிர்ப்புகள் அடங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலரால் உதவிகள் கிட்டும். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மனைவிக்கு உடல் நலம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள்.
மையப் பகுதியிலிருந்து பிள்ளைகளால் பிரச்னை, செலவுகள் வந்துப் போகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடமேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 12, 21, 24, 27
அதிர்ஷ்ட எண்கள் : 3, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கருநீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள்