1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலர் புது வீட்டில் குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் பாசமழைப் பொழிவார்கள்.
பூர்வீக சொத்து கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் திருப்பம் உண்டாகும். வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். சகோதர ஒற்றுமை வலுக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். மையப் பகுதியில் அரசு காரியங்கள் இழுபறியாகும்.
இனந்தெரியாத கவலை, கோபம், டென்ஷன் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.
எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். எதையும் சாதித்துக் காட்டும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 5, 10, 18
அதிர்ஷ்ட எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளம்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்