Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31

நவம்பர் மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31
, புதன், 31 அக்டோபர் 2012 (19:14 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மழலை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். புது வீடு வாங்குவீர்கள்.

திருமணம், கிரகப் பிரவேசம் முன்னின்று நடத்துவீர்கள். வேலை கிடைக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வி. ஐ. பிகளின் தொடர்பு கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் உடல் வலி, களைப்பு வந்துப் போகும்.

சகோதர‌‌ர்கள் உங்கள் வளர்ச்சி உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அனுகூலம் உண்டு. திருமணம் முடியாதவர்களுக்கு முடியும். தந்தைவழியில் மதிப்புக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்‌தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுக்காக மேலதி£ரியிடம் பரிந்துப் பேசுவீர்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 6, 15, 24, 22
அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், மஞ்சள்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், சனி

Share this Story:

Follow Webdunia tamil