Religion Astrology Numerology 1210 31 1121031034_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23

Advertiesment
நவம்பர் மாத எண் ஜோதிடம் 5
, புதன், 31 அக்டோபர் 2012 (19:11 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிலும் வெற்றி, பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கால் வலி வந்துப் போகும்.

ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். ஆனால் பிள்ளைகளால் அலைச்சல், செலவு, வாக்குவாதம் வந்துப் போகும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். மையப் பகுதியிலிருந்து வாகன விபத்து, மனைவியின் ஆரோக்‌கிய குறைவு, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும்.

சிலர் வீடு மாற வேண்டிய கட்டாயம் வரும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதாகும். ஜாமீன், சாட்சி கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! தலைமையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரக்கூடும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமைக் கொண்டாடுவார். தன்னடக்கத்துடன் செயல்படும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 15, 17, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், சில்வர்கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil