Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடம் : 6, 15, 24

Advertiesment
நவம்பர் மாத எண் ஜோதிடம் : 6, 15, 24
, புதன், 31 அக்டோபர் 2012 (19:05 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்து சிக்கல் தீரும்.

உறவினர்கள், நண்பர்களின் ஆதரவுப் பெருகும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். தாய்வழியில் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். தூரத்து சொந்தங்கள் தேடி வரும்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல் மட்டத்திற்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பள்ளிப் பருவ தோழிகளை சந்திப்பீர்கள்.

மனைவியுடன் கருத்து மோதல்கள், ஒரு வித தயக்கம், தடுமாற்றம், வேலைச்சுமை வந்துப் போகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது வேலையாட்கள், பங்குதாரர்கள் அமைவார்கள். உங்கள் ரசனைக் கேற்ப கடையை மாற்றியமைப்பீர்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வெற்றிக்கு வித்திடும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 15, 24, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 4
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : அடர்நீலம், ஆரஞ்சு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil