Religion Astrology Numerology 1210 31 1121031030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடம் : 9, 18, 27

Advertiesment
நவம்பர் மாத எண் ஜோதிடம் 9
, புதன், 31 அக்டோபர் 2012 (18:50 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

ஆடை, ஆபரணம் சேரும். ஆனால் அலைச்சல், பணப்பற்றாக்குறை, ஒருவித பயம், டென்ஷன், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் இழப்புகள் வந்துச் செல்லும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழங்குங்கள். அவ்வப்போது தலைச்சுற்றல், வேனல்கட்டி, பெற்றோருடன் வாக்குவாதம், முன்கோபம் வந்துச் செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

வேலையாட்கள், பங்குதாரர்களுக்கு உதவுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்‌தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். போராடி வெற்றி பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 3, 6, 10, 18,
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil