Religion Astrology Numerology 1110 29 1111029043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவ‌ம்ப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23

Advertiesment
நவம்பர் மாத எண் ஜோதிடம் 5
, சனி, 29 அக்டோபர் 2011 (19:44 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

பாதியில் நின்ற வீடு கட்டும் வேலைகளை தொடர்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். சொத்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அவ்வப்போது வீண் டென்ஷன், முதுகு, மூட்டு வலி வந்து விலகும்.

ஆன்மீகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 13, 15, 22, 24, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், மயில் நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil