Publish Date: Sat, 29 Oct 2011 (19:35 IST)
Updated Date: Sat, 29 Oct 2011 (19:35 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கனத்த மனசு லேசாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். அவ்வப்போது மனைவியுடன் வாக்குவாதம் வரக்கூடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த வகையில் உதவிகள் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன் மூலம் பணம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். விட்டுக் கொடுப்பதால் வெற்றி பெறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 7, 9, 15, 18, 19, 24, 27
அதிர்ஷ்ட எண்கள் : 5, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்
Webdunia
Publish Date: Sat, 29 Oct 2011 (19:35 IST)
Updated Date: Sat, 29 Oct 2011 (19:35 IST)