Religion Astrology Numerology 0812 31 1081231027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜன‌வ‌ரி மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 28

Advertiesment
ஜனவரி மாத எண் ஜோதிடம்  2
, புதன், 31 டிசம்பர் 2008 (14:06 IST)
2, 11, 20, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.

விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசுக்காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். வெளிவட்டாராத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரியமானவர்களைச் சந்தித்து பழைய நல்ல சம்பவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அக்கம் -பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர்கள்.

வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். வேற்றுமதத்தினர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். புதிய நபர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். சம்பளப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கலைஞர்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும். தாழ்வுமனப்பான்மை, தடைகள் விலகும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 9, 13, 18, 21, 27, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, ப்ரௌன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil