Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக‌‌ஸ்‌ட் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 4, 13, 22, 31

Advertiesment
ஆக‌‌ஸ்‌ட் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 4, 13, 22, 31
, வியாழன், 31 ஜூலை 2008 (20:28 IST)
4, 13, 22, 31-ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முற்பகுதியை விட மையப்பகுதியும், பிற்பகுதியும் எதிலும் வெற்றியைத் தரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல எண்ணுவீர்கள்.

உடன்பிறந்தவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். கொஞ்சம் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு. சொந்தம் பந்தங்களின் விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசாங்க வேலைகளிலிருந்த தேக்க நிலை மாறும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் செலவு வைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். வேலையாட்களை அரவணைத்து போவது நல்லது. இரும்பு, மரப்பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும். சக ஊழியர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படுங்கள். தனித்திறமை, நிர்வாகத்திறமை அதிகரிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 6, 13, 15, 22, 24, 31
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil