Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக‌ஸ்‌ட் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 9, 18, 27

Advertiesment
ஆக‌ஸ்‌ட் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 9, 18, 27
, வியாழன், 31 ஜூலை 2008 (20:27 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர்விடும். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். கணவன் -மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்ல முற்படுவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தால் வீண் செலவுகள் வந்து போகும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழால் உருவாகும். தலைவலி, வயிற்றுக்கோளாறு வந்துபோகும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையினர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். பிற்பகுதியில் நினைத்ததை சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 14, 15, 23, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, கிளிப்பச்சை,
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil