Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூ‌ன் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 4, 13, 22, 31

Advertiesment
ஜூ‌ன் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 4, 13, 22, 31
, சனி, 31 மே 2008 (19:38 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். கணவன்-மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சகோதர வகையில் மனஸ்தாபங்கள், வீண் செலவுகள் வந்து போகும். குடும்பத்தில் உங்கப் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைப்பற்றி பேச வேண்டாம். தாயுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து விலகும். மனப் போராட்டங்கள் ஓயும்.

வெளிவட்டாரம் பரபரப்பாக அமையும். அரசால் ஆதாயம் பெறுவீர்கள். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. கனவுத்தொல்லைகள், வயிற்று வலி விலகும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். . ஆன்மீகவாதிகளின் சந்திப்பால் மன நிறைவு பெறுவீர்கள். சொத்து பிரச்சனைகளை கவனமாக கையளுவது நல்லது. தடைபட்ட கட்டிட பணிகளை இனி தொடங்குவீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விரும்பிய கோர்ஸில் போராடி சேருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் வந்து போகும். வழக்குகள் சாதாகமாக அமையும். வேற்று மதத்தினர்களின் உதவி கிடைக்கும். வாகனச் செலவுகள் குறையும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இரும்பு, புரோக்கரேஜ், எண்டர்பிரைஸவகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீகள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் விலகும். உங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சம்பளம் உயரும். உற்சாகம் பொங்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள் - 1, 4, 10, 13, 19, 22, 28, 31
அதிஷ்ட எண்கள் - 1, 4
அதிஷ்ட நிறங்கள் - சிவப்பு, வைலெட்
அதிஷ்ட கிழமைகள் - வெள்ளி, திங்கள்

Share this Story:

Follow Webdunia tamil