Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூ‌ன் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 5, 14, 23

Advertiesment
ஜூ‌ன் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 5, 14, 23
, சனி, 31 மே 2008 (19:36 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைகள் நீங்கும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இனிமையாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. பயணங்களால் ஆதாயம் பெறுகும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கன்னிப்பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கனவுத்தொல்லை, கண் எரிச்சல் விலகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். வீடு, மனை வாங்க, விற்க நிலவி வந்த தடைகள் நீங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பழைய சரக்குகளை அதிரடியாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவதைப் பற்றி யோசிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவி வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையை கண்டு அனைவரும் வியப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. சம்பளப்பிரச்சனை தீர்வுக்கு வரும். தடைகள் உடைபடும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள் - 5, 6, 14, 15, 23, 24
அதிஷ்ட எண்கள் - 5, 6
அதிஷ்ட நிறங்கள் - மயில் நீலம், சிவப்பு
அதிஷ்ட கிழமைகள் - வியாழன், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil