7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எண்ணங்கள் பூர்த்தியாகும். தடைபட்ட காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகள் அதிகம் செலவு வைப்பார்கள். உடல் அரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். சோர்வு, அலைச்சல் விலகும். சகோதர வகையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். அவர்களுக்கு உதவுவீர்கள். வெளியூர் பயனங்களால் ஆதாயம் உண்டு.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வேலை வாய்ப்புகள் தேடி வரும். குல தெய்வப்பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வி. ஐ. பி களிடமிருந்து உதவி கிடைக்கும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும். விரும்பிய படிப்பில் சேருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் குறையும். வேற்று மதத்தினர்களால் நன்மை பிறக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புரோக்கரேஜ், எண்டர் பிரைஸ் வகைகளால் ஆதாயம் பெறுகும். கூட்டுதொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை கண்டு சக ஊழியர்களும் வியப்பார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பள உயர்வு உண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள் - 2, 7, 11, 16, 20, 25, 29
அதிஷ்ட எண்கள் - 2, 7
அதிஷ்ட நிறங்கள் - மஞ்சள், ஊதா
அதிஷ்ட கிழமைகள் - வியாழன், சனி