8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றியே கிட்டும். சோர்வாக இருந்த நீங்கள் இப்பொழுது சுறுசுறுப்படைவீர்கள். முகப் பொலிவு கூடும். தடை பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளிடம் உண்மையான அன்பு காட்டுவீர்கள். தேக ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். சகோதரர்களின் வளர்ச்சிக்காக சில உதவிகளை செய்வீர்கள். உறவினர்கள் வகையில் நன்மை பிறக்கும்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிட்டும். ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி பெறுகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்தையை மாற்றியமைப்பீர்கள். அரசுக்காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளி நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து போவீர்கள். வீடு, வாகனச் செலவுகள் குறையும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். சங்கம், இயக்கம் இவற்றில் சேருவீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். நட்பு வட்டாரம் விரியும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். எலட்ரிக்கல், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் சுமுகமான லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழுபரியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடையே நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் எல்லாம் மறையும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும். புது வாய்ப்புகளும் தேடி வரும். எதிலும் வெற்றி காணும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள் - 2, 5, 11, 14, 20, 23, 29
அதிஷ்ட எண்கள் - 2, 5
அதிஷ்ட நிறங்கள் - சில்வர்கிரே, வைலெட்
அதிஷ்ட கிழமைகள் - செவ்வாய், வியாழன்