Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23

க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Advertiesment
மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23
, வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (19:06 IST)
5, 14, 23 - ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நன்மை பிறக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். கணவன் - மனைவிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். உடன் பிறந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

பிள்ளைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். முன் கோபம், டென்ஷன் அவ்வப்போது வந்து விலகும். பழைய கடனை பைசல் செய்ய கொஞ்சம் அலைய நேரிடும் . சொத்துச் சிக்கல்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மனகுழப்பங்கள் வந்து போகும். பெற்றொரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

நண்பர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். . அரசுக்காரியங்களில் வெற்றி உண்டு. சொந்த ஊரில் மதிக்கபடுவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். தூக்கத்தை குறைக்காதீர்கள். கண் எரிச்சல் ஏற்படு. தாயாரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது மாணவர்களின் நினைவுத்திறன் பெருகும். அரைகுறையாக நின்று போன பல வேலைகளை இனி முடிப்பீர்கள்.

நீண்ட நாளாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அயல் நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். நம்பிக்கைக்குரியவர்களின் அறிவுரைப்படி சில மாற்றங்களை செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே விட்டுக் கொடுத்து போவது நல்லது.

உத்யோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலைசுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் தொந்தரவு விலகும். தடைகளை தாண்டி வெற்றி பெறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் - 2, 7, 11, 16, 20, 25, 29
அதிர்ஷ்ட எண்கள் - 2, 7
அதிர்ஷ்ட நிறங்கள் - மஞ்சள், ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் - வியாழன், சனி

Share this Story:

Follow Webdunia tamil