Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1,10,19,28

1,10,19,28

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (13:14 IST)
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். முன் கோபம், டென்ஷன் வந்து போகும். தேக ஆரோக்கியம் திருப்தி தரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உடன் பிறந்தவர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்கள் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். மாதவிடாய்க் கோளாறு, தூக்கமின்மை விலகும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். சொத்துப்பிரச்சனைகளை பொறுமையாக கையாளுங்கள். தடைபட்ட கட்டிட பணிகளை மாதத்தின் பிற்பகுதியிலிருந்து தொடங்குவீர்கள். அம்மாவின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பேச்சில் இனிமை கூடும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்து போவது நல்லது.

வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வேலையாட்களுடன் நிலவி வந்த மன ஸ்தாபங்கள் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் அனுசரித்து போவீர்கள். இரும்பு, புரோக்கரேஜ், ஷேர் வகைளால் நல்ல லாபம் உண்டு. உத்யோகத்தில் முற்பகுதி கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சம்பளப் பிரச்சனைகள் தீரும். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிப்பு கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதிக்கும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil