Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற நேரத்தை ஜோதிடப்படி எப்படி கருதுகிறீர்கள்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற நேரத்தை ஜோதிடப்படி எப்படி கருதுகிறீர்கள்?
, சனி, 24 ஜனவரி 2009 (12:57 IST)
உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் 44வது அதிபராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி இரவு 10.40 மணியளவில் (இந்திய நேரப்படி) பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்றுள்ளார். பதவியேற்ற தேதி, நேரம் இவற்றைக் கணித்து அவரது அதிபர் பதவிக்காலம் எப்படி இருக்கும், எவ்வளவு காலம் பதவியில் நீடிப்பார் என்பதை கூறுங்களேன்?

பதில்: எண் ஜோதிடப்படி அவர் பதவியேற்ற நாள் பலவீனமாக உள்ளது. 20ஆம் தேதிக்கு இரண்டின் ஆதிக்கத்தில் வந்தாலும், அன்றைய தினத்தின் கூட்டு எண் (20/1/2009) ஐந்து ஆக உள்ளது. எண் ஜோதிடப்படி 2க்கும், 5க்கும் ஒன்றுக்கு ஒன்று பகை.

அதேபோல் பதவியேற்ற தினத்தன்று காணப்பட்ட கிரக அமைப்பும் பலவீனமாகவே உள்ளது. கன்னி லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் உடைய தினத்தில் அவர் பதவியேற்றுள்ளார். அன்று சுக்கிரன் 6ஆம் இடத்தில் மறைந்துள்ளது. விருச்சிக ராசி அன்று அவர் பதவியேற்றுள்ளது எல்லா வகையிலும் பலமாக கருதலாம்.

ஒபாமாவின் சொந்த ஜாதகத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு சாதகமாக இருக்கும் எனக் கொள்ளலாம். பதவியேற்ற காலமும் அனுஷம் நட்சத்திரத்தில் என்பதால் ஈழப் பிரச்சனையில் ஒபாமா நடுநிலையாக செயல்பட்டு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு காரணமாக இருப்பார்.

ஒபாமா பதவியேற்ற தினம் கன்னி லக்னத்தில் வருகிறது. பொதுவாகவே கன்னி லக்னம் (புதனுடையது) சாமர்த்தியமான லக்னம் என ஜோதிட ரீதியாக கருதப்படுகிறது. புதன் என்றால் தொலை நோக்கு சிந்தனை. சொன்னை செய்தல், செய்வதையே சொல்லுதல் போன்ற அமைப்பை உடையது. மேலும் புதன் ஒரு இணக்கமான கிரகமாகும்.

கன்னி மகனைக் கைவிடேல் என்றொரு பழமொழி உண்டு. கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்தவர்களை காசு கொடுத்தாவது நமது நண்பர்களாக்கிக் தவர்களை காசு கொடுத்தாவது நமது நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் உள்ளர்த்தம்.

எல்லா காலத்திலும் நம்மிடம் இருந்து பிரியாமல் உள்ளார்ந்த அன்புடன் கன்னி ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள். நெருக்கடி நேரத்தில் ஒதுங்கிவிடாமல் கூட இருந்து தோள் கொடுத்து உயர்த்திவிடக் கூடியவர்களும் இவர்களே.

அந்த கன்னி லக்னத்தில் ஒபாமா பதவியேற்றுள்ளதால், அவரது இனத்தவரின் ஆதரவு பெரியளவில் இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்டவர்கள், அயல்நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதரவு இவருக்கு பெருமளவில் கிடைக்கும். இவர் பதவியேற்றுள்ள நாளின் ஓரையை வைத்துக் கணக்கிடும் போது இவருக்கு 2009, 2010 ஆகிய ஆண்டுகள் கடும் சவால் விடுப்பதாக இருக்கும்.

விருச்சிக ராசிக்கு குரு ரொம்ப முக்கியமானவர். தற்போது குரு நீச்சமடைந்துள்ளதால் இந்த ஆண்டு முழுவதும் ஒபாமா கடும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் வரும் மே, ஜூன், ஜூலை அதிரடியாக சில திட்டங்களை கொண்டு வந்து மிகப்பெரிய மாற்றங்களை ஒபாமா உருவாக்குவார்.

பொதுவாக அனுஷம் நட்சத்திரத்தை பொறுத்தவரை கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிக்கக் கூடியது எனலாம். ரொம்ப அடிமட்டத்தில் இருப்பவனையும் அணைத்துச் சென்று, அவனது தோல்வி மனப்பான்மையைப் போக்கி பொதுவுடைமையை ஏற்படுத்தும். அந்த நட்சத்திரத்தில் இவர் பொறுப்பேற்பதால் சோஸலிசத்தை மேம்படுத்துவார். இவர் பதவியேற்றுள்ளது பணக்காரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழிவழியாக கோலோச்சி வந்தவர்களின் சகாப்தத்தை ஒபாமா உடைப்பதுடன், அனைவருக்கும், அனைத்தும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவார். ஒரு இடத்தில் உள்ள அதிகாரம், பணக் குவியலை அனைவருக்கும் வழங்கும்படி செய்வார். இவையெல்லாம் மே, ஜுன், ஜுலை ஆகிய 3 மாதங்களில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், 2009, 2010 முடியும் வரை இவர் மிகக் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருநாளைக்கு 18 முதல் 20 மணிநேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்கு நடுவே எதிரிகளால் இவர் தாக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக 2010இல் ஒபாமா மீது தாக்குதல் நடத்தப்படலாம். அதில் அவர் தப்பிப்பார்.

ஆனால் 2011 இவருக்கு உச்சக்கட்ட வளர்ச்சியை அளிக்கும் விதத்தில் அமையும். அவர் நினைத்ததை முடிக்கும் பலத்தை முழு முழுக்க வழங்கும்.

இந்தியாவுக்கு (கடக ராசி, ரிஷப லக்னம்) சாதகமான ஜாதக அமைப்பில் (கன்னி லக்னத்தில்) இவர் பொறுப்பேற்றுள்ளதால் (ரிஷபம்-சுக்கிரனின் லக்னம், கன்னி-புதனின் லக்னம்) இவர் அமெரிக்காவின் அதிபராக பதவி வகிப்பது இந்தியாவுக்கு பலமான நிலையை ஏற்படுத்தும்.
அதேவேளையில் இந்தியாவுக்கு மறைமுகமாக, நேரடியாக தொந்தரவுகள் தரக்கூடிய பாகிஸ்தானுக்கு ஒபாமாவால் நெருக்கடி உண்டாகும்.

பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை தூண்டும் அனைத்து நாடுகளும் ஒபாமாவின் வருகையால் நெருக்கடியைச் சந்திக்கும். இந்தியாவுக்கு எதிரி நாடுகளை, ஒபாமாவும் தனது எதிரியாகவே கருதுவார் என்றும் கூடச் சொல்லலாம். இதன் காரணமாகவே அமெரிக்காவில் அவருக்கு எதிர்ப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பழமைவாதிகளால் ஒபாமா விமர்சிக்கப்படுவார், வெறுக்கப்படுவார், எதிர்க்கப்படுவார். ஆனால் புதுமை விரும்பிகள், அமைதியை விரும்புவர்கள் ஒபாமாவை வரவேற்பார்கள்.

ஆனால் அந்நாட்டின் 44வது அதிபர் என்ற வகையில் பார்க்கும் போது (4+4=8) எண் ஜோதிடப்படி அவர் சனியின் ஆதிக்கத்தில் வருகிறார். எனவே வரலாற்றில் பெயர் பெறக் கூடிய தலைவராக விளங்குவார்.

சனி சமாதானத்தை விரும்பக் கூடிய கிரகம் என்றாலும், ஒபாமா பதவியேற்கும் போது (தற்போது) சிம்மத்தில் அமர்ந்துள்ளது. எனவே, தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் இவர் (அமெரிக்கா) சில நாடுகள் மீது போர் தொடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதுவும் நான்கைந்து முறை முறையான எச்சரிக்கை விடுத்தும் பணியாமல் வாலாட்டினால் மட்டுமே போர் தொடுக்கப்படும்.

பொதுவாக புதன் ஆதிக்கம் உள்ளவர்கள் புத்திசாலித்தனமானவர்கள். நேரடியாக கத்தி எடுத்துப் போராடாமல் வேறு அணுகுமுறைகள் மூலம் வெற்றி காண்பர். அந்த வகையில் ஒபாமா நேரடியாக ஒரு சிலரைத் தாக்கினாலும் (போர்), சிலரை மறைமுகமாக (பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்து) தாக்குவார்.

உதாரணமாக ஒரு பெரிய பயங்கரவாத அமைப்பை ஒழிக்க அதனுடன் முதலில் நேரடியாகப் போராடாமல் அதற்கு உதவுவது யார், எந்த நாடு ஆதரவு அளிக்கிறது என்று புலனாய்வு செய்து அவற்றை உடனடியாக முடக்குவார், வேரறுப்பார். எதிரிகளை பல முனைகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்குவார்.

ஒபாமா சிறப்பாக செயல்படுவார் என்பதால் எல்லா வகையிலும் இவரை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு அவருக்கு கடுமையாக இருந்தாலும், உலகளவில் இவர் மிகச் செல்வாக்கு உள்ள தலைவராக விளங்குவார். ஆனால் சில உயிர் கண்டங்கள் உண்டு என்றாலும் உயிர் தப்பித்து விடுவார்.

கேள்வி: கடந்த காலங்களில் உலகை தலைமை ஏற்று நடத்தும் வலிமையுடன், உலகின் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்கியது. ஆனால் ஒபாமா பதவியேற்றுள்ள இத்தருணத்தில் அமெரிக்கா பலவீனமாக உள்ளது? இந்த நேரத்தில் ஒபாமாவின் சொல்லுக்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவை செவி சாய்க்குமா?

இவருடைய சொல்லுக்கு அந்த நாடுகள் செவி சாய்த்தாலும், மறைமுகமாக இவருக்கு சில இடர்பாடுகளையும் அந்நாடுகள் ஏற்படுத்தும். முன்னேறிய நாடுகளின் முழுமையான ஆதரவு ஒபாமாவுக்கு கிடைக்காது. வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் பழைய பணக்காரன் இவருக்கு உதவாவிட்டாலும், புதுப்பணக்காரன் இவருக்கு கை கொடுப்பான்.

அதனால் சமீப காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ள ஒபாமாவுக்கு எல்லா ஒத்துழைப்பும் தருவார்கள்.

இவருடைய ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஒபாமா பொறுப்பேற்கும் போது உள்ள கிரக நிலை பலவீனமாகக் காணப்படுகிறது என ஏற்கனவே கூறியிருந்தேன். செவ்வாய் 4வது வீட்டில் அமரக்கூடாது. ஆனால் கன்னி லக்னத்திற்கு 4வது வீட்டில் செவ்வாய் உள்ளது. இதன் காரணமாக தட்டில் சோறு இருந்தாலும் சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.

பொதுவாக அதிபருக்கான சலுகைகளை ஒபாமாவால் அனுபவிக்க முடியாமல் போகும். ஒவ்வொரு மணி நேரமும் இவர் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழலை செவ்வாய் ஏற்படுத்தும் என்பதால் பிற விடயங்களில் இவரால் கவனம் செலுத்த முடியாது.

மற்ற கிரகங்களை வைத்துப் பார்க்கும் போது, இவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அதன் மூலம் இவர் பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், புதனின் சிறப்பான பலன்களால் இவர் நூலிழையில் தப்பித்தும் விடுவார்.

காற்றுக்கு உரிய கிரகம் என்பதாலும், வலிமையான கிரகம் என்பதாலும் புதனின் பங்களிப்பால் தன்னை கவிழ்க்க நினைக்கும் சக்திகளை, சூழ்ச்சிகளை முன்பே அறிந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளையும் ஒபாமா ஏற்படுத்திக் கொள்வார்.

Share this Story:

Follow Webdunia tamil