10ல் சனி இருந்தால் பெண்களுக்கு கேடு என்று கூறப்படுவது சரியா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்-
எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் அது ஆண்களுக்கு கேடு விளைவிக்கும் அல்லது பெண்களுக்கு கேடு விளைவிக்கும் என்று பிரித்துக் கூற முடியாது. பொதுவாகவே 10ல் சனி நல்ல பலன்களையே வழங்கும்.
கடின உழைப்பால் அவர்கள் உயர்ந்தவர்களாக இருப்பர். சில சமயத்தில் உழைப்புக்கான அங்கீகாரம் உடனடியாக கிடைக்காமல் போகலாம். ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10ல் சனி இருந்தால் நீதிபதி ஆக வாய்ப்பு உண்டு. மிதுன லக்னத்திற்கும் இந்த வாய்ப்பு உண்டு.
10ல் சனி இருக்கப் பெற்றவர்கள் மிகப் பெரிய நீதிமான்களாக இருப்பர். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மாறாமல், வறுமையில் தள்ளப்பட்டாலும் தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளாமல் நிலையான கொள்கையில் உறுதியாக இருப்பர். ஜீவகாருண்யம், மனித நேயம் அதிக உள்ளதால், இவர்கள் கொடுத்து ஏமாறுவதும் உண்டு. கொடுத்துச் சிவந்த கைகள் என்றும் இவர்களைக் கூறலாம்.
இதேபோல் 10ல் சனியால் சில தீமைகளும் ஏற்படும். நாம் ஏற்கனவே கூறியது போல் “காரியவன் காரியத்தில் அமர காரிய பங்கமாடா” என்பது போன்ற பாடல்களும் ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 10ல் சனியால் பெண்களுக்கு கேடு என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை.