Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழப் பிரச்சினையால் தற்போது தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதே?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

ஈழப் பிரச்சினையால் தற்போது தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதே?
அந்த நாடு (இலங்கை) விருச்சிக ராசி, அதனை ஆள்பவரும் விருச்சிக ராசி, உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தலைவருக்கான ராசியும் விருச்சிக ராசிதான்.

அதனால்தான் இந்த பிரச்சினையில் ஒரு வாரம் இவர்களது கை ஓங்குவதும், அடுத்த வாரம் மற்றவரது கை ஓங்குவதுமாக உள்ளது.

வெற்றி - தோல்வி இல்லாமல் போர் நடந்து கொண்டே இருக்கும் நிலைதான் அங்கு காணப்படுகிறது. நவம்பர் 9ஆம் தேதி செவ்வாய் விருச்சிகத்திற்கே வருகிறது. அதாவது அந்த நாட்டிற்குரிய கிரகம் அந்த ராசிக்கே வருகிறது. அதன் பிறகு ஒரு இடைக்காலத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்போது உரிமைக்காக போராடுபவர்களின் கை ஓங்கும் வாய்ப்பு உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களது நீண்ட கால கனவு கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

ஜோதிட ரீதியாகப் பார்த்தால், உரிமைக்காகப் போராடுபவர்கள்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மூவரும் ஒரே ராசியாக இருந்தாலும், உரிமைக்காகப் போராடுபவரின் தசா புக்தி சிறப்பாக உள்ளது. எனவே நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து எதிர்பார்ப்புகளின் எல்லையை நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது.

உலக அளவில் ஆதரவு குரல்கள் ஆதரவாக எழும்பும் வாய்ப்பும் உள்ளது.

முன்னரே சொன்னது போல தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவான குரல் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை ஈழத்திற்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

நவம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஆதரவுக் குரல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களது இலக்கின் ஒரு பகுதியை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil