Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் சினிமாவில் ஆபாசமாக நடிப்பது பற்றி?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

பெண்கள் சினிமாவில் ஆபாசமாக நடிப்பது பற்றி?
, வியாழன், 29 மே 2008 (16:07 IST)
பெண்ணாக இருந்தாலும் சரி... ஆணாக இருந்தாலும் சரி... அவர்களது குணங்களை நிர்ணயிப்பது கிரகங்கள்தான். முக்கியமானது லக்னம். லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும். மேஷ ராசி என்றால் லக்னாதிபதி செவ்வாய். ரிஷப ராசி என்றால் லக்னாதிபதி சுக்கிரன். மிதுன ராசியாக இருந்தால் லக்னாதிபதி புதன், கடக ராசியாக இருந்தால் லக்னாதிபதி சந்திரன், சிம்ம ராசியாக இருந்தால் சூரியன் லக்னாதிபதி.

லக்னாதிபதி நல்ல விதத்தில் இருக்க வேண்டும். அதாவது நல்ல வீட்டில் அமைந்திருக்க வேண்டும். அப்படி அமைந்தால் சமுதாயத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து கலாச்சாரம், பண்பாட்டை கட்டிக்காக்கும் குணம் இருக்கும். வரக்கூடிய சந்ததிகளையும் அதே வழியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

லக்னாபதி 12ல் மறையும் போது, சராசரியாக இல்லாமல் வித்தியாசப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும். எதையாவது எதிர்த்துப் போராட வேண்டும் என்று நினைப்பார்கள்.

6, 8, 12வது இடங்கள் பற்றி சொல்லுங்கள்?

லக்னத்தில் இருந்து 6, 8, 12வது இடங்கள் மறைவுஸ்தானங்கள். மறைவு ஸ்தானங்களில் வரும்போது மாறுபட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும்.

லக்னாதிபதி முதல் வீடு. இந்த லக்னாபதி ராகு அல்லது 6, 8, 12வதுக்குரியவனுடன் சேர்ந்தால்தான், தன்னை பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அரைகுறையாக ஆடை அணிவது, சிலதை பேசுவது போன்ற செய்கைகள் உண்டாகும்.

சில மாதிரி நடந்து கொள்வதும் இருக்கும். இவர்களது கற்பு நிலையும் கொஞ்சம் மாறுபடும். அதாவது அவர்களது சிந்தனையில் கற்பு என்றால் என்ன என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கும்.

லக்னாதிபதி கெடும்போது, ராகு, சனியுடன் சேரும்போது இதுபோன்றவை ஏற்படும்.

மற்றவர்கள் யாரும் இயல்பு நிலைக்கு மாறாக வர மாட்டார்கள். பாரம்பரிய குடும்பத்தில் கூட இதுபோன்ற பிள்ளைகள் பிறந்து தடம் மாறுவதை பார்க்கின்றோம்.

நடிகை, நடிகர் என்று மட்டும் இருப்பதில்லை. எத்தனையோ குடும்பங்களில் நாலு பிள்ளைகளில் ஒன்று மட்டும் இப்படி இருக்கும். இதையும் பார்த்திருக்கிறோம்.

பிறக்கும்போது லக்னாதிபதி எப்படி அமைகின்றதோ, அதைப் பொருத்து உணவு, உடை, பழக்க வழக்கம் என அனைத்தும் அமைகிறது.

இந்த கிரக அமைப்பு இருந்தால் இதுபோன்று இருப்பார்கள்.


பண்பாடு என்பதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

பண்பாடு என்பது பூர்வ புண்ணியஸ்தானம். மூதாதையர், பெற்றோர். அதற்குரிய இடம் 5ஆம் இடம். பண்பாட்டை மதிக்க வேண்டுமா, பின்பற்ற வேண்டுமா அல்லது உடைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வது லக்னாதிபதியின் இடம்தான்.

லக்னாதிபதியும் கெட்டு, பூர்வ புண்ணியஸ்தானத்திற்குரிய 5ம் இடமும் கெட்டால்தான் படு மோசமாக நடந்து கொள்வார்கள்.

இப்படி இருக்கும்போது தமிழர்கள் பண்பாடு என்று ஒன்றை எப்படி வைத்திருந்தார்கள்?

பண்பாடு ஒன்று இப்போதும் இருக்கிறது. அப்போதும் பண்பாட்டை மீறுவது, விதி மீறல்கள் என்பது இருந்துள்ளது.

சதவீதம் குறைவாக இருந்தது. இப்போது அதிகமாக இருக்கிறது. அப்போதைய கிரகங்களின் சார்பு நிலை வேறு மாதிரி இருந்தது. இப்போது வேறு மாதிரி இருக்கிறது.

அவ்வளவு ஏன் எல்லா யுகங்களிலும் இதுபோன்ற விதிமீறல்கள் நடந்துள்ளன. எல்லா யுகங்களிலும் துரியோதனன்கள் போன்றோர் இருந்துள்ளனர். என்ன வித்தியாசம் என்றால் இப்போது அதிகமாக இருக்கின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil