ஒரே நிலையில் இருக்கும் இருவர் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்வாதைப் பார்க்கவில்லையே?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. மாதந்தோறும் 80க்கும் மேற்பட்டவர்களை பார்க்கிறோம். பி.இ. படித்துவிட்டு பி.சி.ஏ. படித்தவரைத் திருமணம் முடித்தவர்களுக்குள்தான் அதிக பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களுக்குள்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் அதிகமாக இருக்கிறது.
ஏதோ ஒரு வேகத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் ஒரு நிகழ்ச்சிக்குப் போய் வரும்போது, உறவினர்களை சந்திக்கும் போது என சிலர் கூறுவதைக் கேட்டு மன உளைச்சல் ஏற்பட்டு கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.
இந்த பிரச்சினை சமநிலையில் இருக்கும் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படுவதில்லை. பிரிந்து செல்லும் தம்பதிகளின் எண்ணக்கையும் இவர்களில் அதிகம் இல்லை.
ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் கணவன் - மனைவி இடையே உடனடியாக விவாகரத்து பெறும் அளவிற்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் சமமாக இருக்கும் கணவன் - மனைவி சண்டை போட்டுக் கொண்டே இருப்பது போன்று தோன்றும். ஆனால் சந்தோஷமாக வாழ்வார்கள்.
மேலும், ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிந்து நீடித்து வாழ்வதற்கு அவர்கள் மண வாழ்வைத் துவங்கும் நாள்தான் மிக முக்கியம்.
ஒரு நடிகை வந்திருந்தார். அவரது மகன் காதலிப்பதாகக் கூறினார். மகனுக்கும், அவர் காதலிக்கும் பெண்ணிற்கும் தற்போது கெட்ட நேரம். இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் உடனே பிரிந்து விடுவார்கள். என்ன செய்வது என்று கேட்டிருந்தார். அதற்கு பரிகாரமாக அவர்களது திருமணத்தை இரவில் செய்து விடுங்கள் என்று கூறிவிட்டேன். அதாவது இரவு 3 மணி முதல் 5 மணிக்குள் செய்து விடலாம். அல்லது திருட்டுத் தனமாகவும் செய்து விடலாம் என்று கூறினேன்.
இது ஒரு பரிகாரம் போன்றதுதான். திருமணம் எப்போது காலையில் பகலில்தான் நடக்கும். எனவே இது மாறுபட்டு இரவில் நடக்கும்போது அதனால் இருக்கும் பிரச்சினைகள் சரியாகிவிடும்.
கிரகங்களின் போக்கிலேயே போய் அதில் ஏதாவது ஒரு வழி இருக்கிறதா என்று பார்த்து அதனை செய்து விடுவது சிறந்தது.