மாநிலங்களவைத் தேர்தல் எப்படி இருக்கும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
மாநிலங்களவைத் தேர்தல் தேதி 26. கூட்டினால் 8 வருகிறது. இங்கு இருப்பவர் எல்லாமே எட்டு எட்டாக பார்த்துத்தான் செய்து வருகிறார். தனது முதல் அமைச்சரவையையே 26 அமைச்சர்களுடன் பதவியேற்றுக் கொண்டவர்தான்.
சனியின் குணம் என்னவென்றால் இழுபறி நிலையை தக்க வைத்துக் கொள்வதாகும். உங்கள் கை விட்டுப் போகக் கூடாது என்று நினைத்தால் அந்த காரியத்தை 8ம் தேதி செய்யலாம். கொஞ்சம் இழுபறியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் 8ல் செய்யலாம்.
26 என்று பார்த்தால் விசாக நட்சத்திரம் வருகிறது. விசாக நட்சத்திரம் கொஞ்சம் சரியில்லாத நட்சத்திரம். எதிர்காலத்தில் பெரிய அரசியல் மாற்றத்திற்கான பிள்ளையார் சுழியாக இது அமையும்.
முடிவுகளைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு பாதகமாக இருக்காது. அரசியல் சலசலப்பை உருவாக்கும்.