ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
உலக மக்கள் மன இறுக்கத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். மன இறுக்கத்தில் இருந்து மக்களை வெளியே கொண்டு வருவது ஒரு சில துறைகளுக்கு மட்டுமே உள்ளது.
இசை, நாடகம், நடனம், கேளிக்கை, கூத்து, பாடல் போன்றவை அதில் அடங்கும். தற்போது கிரிக்கெட்டும் இந்த துறைகளில் ஒன்றாக ஆகிக் கொண்டிருக்கின்றது.
விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு. இதற்குக் காரணம் விளையாட்டுக்குரிய கிரகம் புதன். அதன் வீடு மிதுனமும் கன்னியும். மிதுனத்தில் புதனுக்குரிய எதிர் கிரகம் செவ்வாய் உட்கார்ந்திருக்கிறது. தரமான விளையாட்டு வீரர்கள் கூட பணத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். மிதுனத்தில் செவ்வாய் உட்கார்ந்திருப்பதுதான் கிரிக்கெட்டை மட்டம் தட்ட வைக்கிறது.
ஏப்ரல் 30க்குப் பிறகு செவ்வாய் மிதுனத்தை விட்டு விலகுகிறது. அதற்குப் பிறகு இந்த ஏலத்தின் முடிவுகளில் மாறுபாடு ஏற்படும். சில வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து விலகலாம். ஏலத்தை ஏற்காமல் போகலாம். இதுபோன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.