உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்ந்துள்ளனவே?
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
இந்தியாவிற்கு இப்பொழுது ஏழரை சனி நடந்துகொண்டிருக்கிறது. 27.9.2009 வரை இது தொடரும். சனி தனது பகை வீடான சிம்மத்தில் சென்று அமர்ந்துள்ளது. நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி, சனியின் ஆதிக்கத்தினால் அடித்தட்டு மக்கள், மண்ணின் மைந்தர்கள் ஆகியோரிடையே எழுச்சியை ஏற்படுத்தும். அவர்கள் உரிமை கோரி போராடுவார்கள்.
அதனால் எல்லா மாநிலங்களிலுமே மண்ணின் மைந்தர்கள், அடித்தட்டு மக்கள், ஆதிவாசிகள் கிளர்ந்தெழுவது நடக்கும். இவர்கள் அச்சுறுத்தப்படலாம், ஆனால் அதையும் மீறி ஆவேசத்துடன் எழுவார்கள். இதையெல்லாம் குரு பெயர்ச்சி பொதுப் பலனிலேயே கூறியுள்ளோம்.
குரு தற்பொழுது ஆயுத வீட்டிற்கு (தனுசு) வந்துள்ளது. இதனால் அமைதியற்ற சூழல் பொதுவாக நிலவும். உ.பி., அசாம் மாநிலங்களில் நிகழ்ந்ததைப்போல மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார் மாநிலங்களிலும் குண்டு வெடிப்புகள் நிகழும் அபாயம் உள்ளது. பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயமும் உள்ளது.