இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனவே. அவற்றுக்கு ஒரே ஜாதகங்கள் இருக்குமா?
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனவே. அவற்றுக்கு ஒரே ஜாதகங்கள் இருக்குமா? அல்லது லேசாக வேறுபடுமா?
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
இரட்டை குழந்தைகளுக்கு ஒரே ராசிக் கட்டம் அமையும். ஆயினும். பாவம், சப்தாம்சம், அஷ்டாம்சம், நவாம்சம் ஆகியன மாறுபடும்.
அஷ்ட வர்க்க பரல்களைப் பார்க்கும்போதும் இரு பிள்ளைகளுக்கும் பரல்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும்.
அதனால்தான் ஒத்த உருவமுள்ள இரட்டையர்களாக இருப்பினும் கல்வி, குணம், அவர்களுக்கு ஏற்படும் நோயின் தன்மை, வாழ்க்கைத் துணை அமைதல், குழந்தை பிறப்பு, ஆயுள் ஆகியன மாறுபடும்.
ராசிக்கட்டத்தில் ஒரே லக்னம், ஒரே நட்சத்திரம், ஒரே ராசி அமைவதால் அவர்களுக்கு ஒத்த இயல்புகள் சார்புத் தன்மை, உதாரணத்திற்கு... அவளுக்கு 2 இட்லின்னா எனக்கும் 2 இட்லி போதும், அவளுக்கு எடுத்த அதே நிற ஆடையை எனக்கும் எடுத்துக் கொடு என்பது போன்ற ஒரே மாதிரியான பிரியங்களைப் பார்க்கலாம்.
10 மணி 1 நிமிடத்திற்கு முதல் குழந்தையும், 10 மணி 03 நிமிடத்திற்கு இரண்டாவது குழந்தையும் பிறக்கின்றன. இந்த இரண்டு நிமிட இடைவெளியைத்தான் ராசிக் கட்டத்தை உடைத்து மிகத் துல்லியமாக அந்த சப்தாம்சம், நவாம்சம், அஷ்டாம்சம் என கணக்கிட்டு பலன்கள் கூறுகிறோம்.