Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமாவாசைக்குப் பின் மழை : கலிய. இரவிச்சந்திரன்!

ஜோ‌திட ஆ‌ய்வாள‌ர் கலிய. இரவிச்சந்திரன்

அமாவாசைக்குப் பின் மழை : கலிய. இரவிச்சந்திரன்!

Webdunia

புரட்டாசி வெயில் உஷ்ணம் மூளை, கண் போன்ற மென்மையான பாகங்களை பாதிக்கக் கூடியது. சிலருக்கு வயிற்று வலியும் வரக் கூடும். பிறவியிலேயே உஷ்ண உடம்பை பெற்றவர்களுக்கு இவ்வெயில் மூலக் கொதிப்பை ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஜெனன ஜாதகத்தில் (ராசி) ஜன்மத்தில் சூரியன் உள்ளவர்களுக்கு கண் வலி வரக்கூடும். வலது பக்கம் தலைவலி உடல், கை, கால் வலி வரும்.

புரட்டாசி துளசி தீர்த்த வழிபாடு!

அதிக உஷ்ணத்தால் ஏற்படும் மூலக் கொதிப்பை கட்டுப்படுத்தவல்ல ஒரே தெய்வீக மூலிகை துளசி. உடலில் உள்ள மூலங்களை உடலுக்கு தேவையான உஷ்ணத்தில் சீராக பாதுகாக்க வல்லது. வயிற்றில் உருவாகும் தேவையற்ற பூச்சிகளை அழிக்க வல்லது. (பக்கவிளைவில்லாத கருத்தடை மூலிகை) குடல் புண், உடல் துர்நாற்றம் இவற்றை போக்கும்.

குறிப்பு : இந்த மாதத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் ஏழுமலையானுக்கு துளசி தீர்த்தம் வைத்துப் படைத்து அதை அனைவரும் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு

இந்த மாதம் கன்னி, துலாம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுவாக புரட்டாசி மாதம் (கன்னி) வெயில் அதிகம் என்றாலும் ஸர்வசித்து ஆண்டு கிரக சாராம்சத்தின்படி மேகத்திற்கு அதிபதி சுக்கிரன் சுகபோக வாசி. ஆதலால் நிலப்பரப்பில் மழையால் அதிக பாதிப்பு இராது. போதுமான அளவு மழையும் நல்ல விளைவும் இருக்கும். இந்த வருடம் அதிக மழை கடலிலும், மிதமான மழை நிலப்பரப்பிலும் பெய்யும். இந்த ஆண்டு புரட்டாசியில் ஆரம்பத்தில் அதிக வெயில் இருந்த போதிலும் புரட்டாசி 16 (அக்டோபர் 3) ஆம் தேதிக்கு மேல் சூழ்நிலை முழுவதும் மாற்றம் அடையும். ஆரம்பத்தில் இருந்த தெளிவான சூழ்நிலை இராது.

காரணம் தற்சுழற்சி குறைவான புதன் திடீரென்று தன்நிலை மாற்றம் அடைவதால் (வக்கிரம் அடைவது) இந்த சூழல், கடல் பகுதிக்கு குருவின் பார்வை இருப்பது இன்னொரு அம்சம். கடல் தெளிவாக இருக்கும் குரு பெயர்ச்சி வரை கடலில் கலக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

அமாவாசைக்குப் பின் மழை

webdunia photoFILE
அக்டோபர் 11க்கு(புரட்டாசி 24) மேல் நல்ல மழையிருக்கும். ஐப்பசி 5ஆம் தேதி (அக்டோபர் 20) வரை தொடரும். இந்த ஆண்டு ஐப்பசியில் அதிக மழையிராது. மாறாக மார்கழி மாதம் மழையிருக்கும். பங்குனி மாதமும் மழை பெய்யக் கூடும் என்று ஜோதிட ஆய்வாளர் கலிய ரவிச்சந்திரன் கணித்துக் கொடுத்துள்ளார்.

இதற்கு ஏற்றார்போல நேற்று அமாவாசை. நேற்று வரை வானம் தெளிவாக இருந்தது. இன்று காலையிலேயே ஆங்காங்கே மேகக் கூட்டங்கள் திரண்டு காணப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil