Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும்?

சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் என்ன பிரச்சினைகள்  ஏற்படும்?
, வெள்ளி, 16 மே 2008 (16:38 IST)
சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும் பகுதி தெற்குப் பகுதி. பொதுவாக வாஸ்து படி, சென்னை மாநகரத்திற்குப் பார்த்தால் சென்னை ரிஷப ராசியில் வருகிறது.

சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட நாள், கிரகம், ராசியை வைத்துப் பார்த்தால் தெற்குப் பகுதி, தென் கிழக்குப் பகுதி நன்றாக வளரும். தெற்கு தாம்பரம், செங்கல்பட்டு வரைக்கும், தென்மேற்கு காஞ்சிபுரம் வரைக்கும். இந்த பகுதிகள் நாளுக்கு நாள் வளரும்.

இதனை யாராலும் தடுக்கவே முடியாது. அதனால் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு இப்போது தடையாக இருப்பவர்கள் கூட நாளை அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. அதில் மாற்றமில்லை.

எதிர்ப்புகள் எல்லாம் தற்காலிகமானதுதான்.

அதே போல வட பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். கடல் புகுவது,

உதாரணமாக வட பகுதியில் இருந்த பாரிமுனை பேருந்து நிறுத்தம் அப்படியே முற்றிலுமாக மாறி கோயம்பேட்டிற்கு வந்துவிட்டது.

அதற்கு பிறகு சென்னை மாநகரமே பெரும் முன்னேற்றம் அடைந்துவிட்டது.

எனவே எந்தவிதமான முன்னேற்றமான செயல்களையும் சென்னையில் தென் பகுதியில் செய்வது மிகவும் நல்லது. அது வாஸ்துபடியும் நன்மையை அளிக்கும்.

தென் பகுதி மென்மேலும் உயர்ந்து கொண்டே போகும்.



Share this Story:

Follow Webdunia tamil