Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலும், கல்யாணமும்

ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்

காதலும், கல்யாணமும்
, வியாழன், 22 நவம்பர் 2007 (12:43 IST)
காதலிப்பவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முன்வராத நிலையில் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவோம் என்றும், எங்களது காதலை அங்கீகரித்து திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நாங்கள் இப்படியே இருந்து விடுவோம் என்று கூட சில ஜோடிகள் மிரட்டுகின்றனர்.

இப்படி மிக நெருக்கமாக காதலிப்பவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாமா? அவ்வாறு செய்தால் அவர்கள் நன்கு புரிந்து கொண்டு ஒத்து வாழ்வார்களா?

ஜோதிடம் என்ன கூறுகிறது?

ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன் :

காதல் என்பது பொதுவாக பருவத்திற்கு வந்த பிறகு உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் ஈர்ப்பு. ஒரே மாதிரியாக 10 பேர் இருந்தாலும் அவர்கள் அனைவர் மீதும் ஈர்ப்பு வராமல் ஒருவர் மீது மட்டும் ஈர்ப்பு வருவது ஏன்? அதுதான் கிரகங்களின் தாக்கம்.

காதலுக்கு உரிய கிரகம் சுக்கிரன். காதலர்களாக இருக்கும் வரை அவர்களை சுக்கிரனே வழி நடத்திச் செல்கிறார்.

அவர்களே கணவன் - மனைவியாகும் போது லக்னத்திற்கு ஏழாவது வீட்டிற்கு உரிய கிரகமான (சப்தம அதிபதி) வேலை செய்யத் துவங்கிவிடும்.

காதல் கிரகமான சுக்கிரனுக்கு பகை கிரகமானதே ஏழாவது வீட்டிற்கு உரியதாக இருந்தாலோ அல்லது குரு தசை, அட்டமத்து சனி ராகு திசையில் சனி முக்தி, சனி திசையில் ராகு முக்தி, சூரிய-சந்திர திசையில் ராகு-கேது முக்தி நடைபெற்றாலோ காதல் முறியும். இவர்களுக்கு திருமணம் நடத்திவைத்தாலும் விரைவில் பிரிந்து விடுவார்கள்.

எனவே, காதலுக்குத் தூண்டும் கிரகத்துடன் திருமணத்திற்கு உதவும் கிரகம் ஒத்துழைத்தால்தான் அந்தக் காதலர்கள் கணவன்-மனைவியாக முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil