Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவை பரப்பிய வாலிபர் - கடலூரில் அதிர்ச்சி

Advertiesment
மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவை பரப்பிய வாலிபர் - கடலூரில் அதிர்ச்சி
, திங்கள், 8 அக்டோபர் 2018 (12:36 IST)
பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து நண்பர்களுக்கும் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் பகுதியியில் வசிக்கும் மாணவி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு சதீஷ் என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. 
 
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையின் போது, மாணவியை ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்திற்கு வரவழைத்த அந்த வாலிபர், அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
 
இதில், அந்த மாணவி மயக்கமடைய, அதை பயன்படுத்தி அவரை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
 
வாட்ஸ்-அப் மூலம், இந்த வீடியோ பலருக்கும் பரவ இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. எனவே, இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி, சதீஷை கைது செய்த போலீசார் அவரை கடலூர் சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரலான வீடியோ - ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்த போக்குவரத்து துறை