கடலூர் மாவட்டப் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தலைமையில் அதிகாரிகள் இன்று கடலூர் மாவட்டப்பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், குளிர்பான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கடைகளில் அவர்கள் இந்த சோதனையை நடத்தினர்.
அப்போது சில கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்த மற்றும் அறிவிக்கப்படாத பொருட்கள் அழுகும் தருவாயில் இருந்த பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
கடை உரிமையாளர்களை ஆரோக்யமான பொருட்களை மட்டுமே விற்கவேண்டும் என எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இதே போன்ற சோதனையில் 200 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.