Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்ஸ் டார்ச்சரால் கணவனை வெட்டி சாய்த்த மனைவி

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (13:18 IST)
பெரம்பலூரைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் தனது கணவன் கொடுத்த செக்ஸ் டார்ச்சரை தாங்க முடியாமல், அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மனைவி லூர்து மேரி. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களில் ஒருவருக்கு திருமணமாகிய நிலையில், 2 வது மகளுக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. செல்வராஜ் தினமும் குடித்து விட்டு, மனைவியிடம் செக்ஸ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். அவரது இந்த கேவலமான செயலுக்கு மனைவி ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை கடுமையாக தாக்குவார். வயதுக்கு வந்த பெண்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல், அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 
 
இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜின் தொல்லை அதிகரிக்கவே கோபமடைந்த லூர்து மேரி, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பின் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வராஜுன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லூர்து மேரி மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் சத்தீஸ்கர் அரசு? - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு..!

மக்கள் வீதியில் விழுந்து நொறுங்கிய விமானம்! 10 பேர் பலி.. பலர் கவலைக்கிடம்! - பிரேசிலை உலுக்கிய விபத்து!

சென்னையில் தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? முழு விவரங்கள்..!

இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா? திமுக அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்