Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மரணமடைந்த 10-ஆம் வகுப்பு மாணவன்; சென்னையில் அதிர்ச்சி

ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மரணமடைந்த 10-ஆம் வகுப்பு மாணவன்; சென்னையில் அதிர்ச்சி
, வியாழன், 18 ஜனவரி 2018 (11:59 IST)
தனியார் பள்ளிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தண்டனை என்ற பெயரில் மாணவனை கொலை செய்த தனியார் பள்ளியை கண்டித்து, பள்ளியின் முன்பு கூடி பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ தனியார் பள்ளியில் திருவிக நகரைச் சேர்ந்த முரளி என்பவரது மகன் நரேந்தர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். முரளி வழக்கம் போல் நேற்று தனது மகனான நரேந்தனரை, பள்ளியில் விட்டுச் சென்றார். பள்ளிக்கு சற்று தாமதமாக வந்த நரேந்தரை உடற்கல்வி ஆசிரியர் மைதானத்தில் டக்வாக் ஓட சொல்லியிருக்கிறார். மைதானத்தில் ஓடிய சிறுவன் சிறிது நேரத்தில் களைப்பாக இருப்பதால் தண்ணீர் வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் உடற்கல்வி ஆசிரியரோ உனக்கெல்லாம் தண்ணி தர முடியாது போய் ஓடு என கூறியுள்ளார். 
 
தொடர்ந்து மைதானத்தில் ஓடிய சிறுவன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளான். இதனைத்தொடர்ந்து நரேந்தரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தது பள்ளி நிர்வாகம். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவனின் பெற்றோரை தொலை பேசியில் அழைத்த பள்ளி நிர்வாகம் நரேந்தர் மயங்கி விழுந்ததால், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய பெற்றோர்கள்,மருத்துவமனையிலிருந்து மாணவனின் உடலை பெற்றுச் சென்றனர்.
 
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட உடற்கல்வி ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரியில்லாத சிஸ்டம்; அதில் ரஜினியின் பங்கு: உண்மை கண்டறியும் சோதனை!