கைதான நிர்வாகியை மக்கள் இயக்கத்திலிருந்து நீக்காதது ஏன்? புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ரசிகர்கள் கேள்வி

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (16:56 IST)
ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி  திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் வயலூரைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான சைன் ஸ்பாவில் ஸ்பா,மசாஜ்,. ஸ்டிரீமிங் ஆகியவற்றுடன்  பாலியல் தொழில் நடந்து வருவதாக  புகார்கள் எழுந்தன.

சமீபத்தில், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட  நிலையில், இவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவானதாகவும், அதன்பின்னர், அவரைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இன்று அவரைக் கைது செய்த போலீசார் விசாரிக்கையில், இடையில் சென்னைக்குச் சென்றதும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்தை சந்தித்தது உறுதியாகியுள்ளது. அதன்பின்னர் அவரை காரைக்கால் செல்ல முயற்சித்த நிலையில், இன்று புதுச்சேரியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது சைன் என்ற ஸ்பாவில் 3 பெண்கள் கைதான பிறகு, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்க செயலாளருக்கு ஆடியோ மூலம் புகார் அளித்தனர்.

அதன்பின்னர், விஜய் இவரை  நீக்க உத்தரவிட்டதாகவும் ஆனால், இன்னும் புஸ்ஸி ஆனந்த் இவரை கட்சியை விட்டு நீக்காமல் வைத்துள்ளதாகவும் ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இன்று திருச்சி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகி கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில் அவரை கட்சியை விட்டு  நீக்கியதாக புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாரா என நிர்வாகிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்