பாஜக பல்வேறு இனம், மொழி, பண்பாட்டை சார்ந்தோருக்கு எதிராக சிந்தனை கொண்டிருப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று திருச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட வாக்குச்சாவடி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது.
திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
புதிய நாடாளுமன்றக் கூட்டத்தில் 888 இருக்கைகள் உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர்கள் என்ற பெயரில் மாநிலங்களவை பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கிறார்கள்..
இதனால், குடும்ப கட்டுப்பாட்டு முறையை சரியாக பின்பற்றி வரும் தமிழ் நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதன் மூலம் வடமாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நமது குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். அதனால், வரும் நாடாளுமன்றா தேர்தல் முக்கியமானது என்று கூறினார்.
மேலும், பாஜக பல்வேறு இனம், மொழி, பண்பாட்டை சார்ந்தோருக்கு எதிராக சிந்தனை கொண்டிருப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.