Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தியிடம் பேசியது என்ன? கமல் பேட்டி

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (14:20 IST)
நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிக்கு அஸ்திவாரமாக கருதப்பட்ட நிலையில் இன்று அவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசியுள்ளார். ராகுல்காந்தி, சோனியா காந்தியுடன் அடுத்தடுத்து கமல் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் சோனியா காந்தியுடனான சந்திப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல், 'நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். மரியாதை நிமித்தமாகவே சோனியா காந்தியை சந்தித்துப் பேசினேன். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன்' என்று கூறினார்
 
மேலும் கூட்டணி குறித்து சோனியாவிடம் எதுவும் பேசவில்லை என்றும், அதுகுறித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் இது இல்லை என்றும் காலம் வரும்போது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்' என்றும் கமல் கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments