நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் இந்த சந்திப்பை கலாய்க்கும் வகையில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசினார்
தமிழகத்தில் இருந்து ஒரு மாபெரும் தலைவர், அரசியலையே கரைத்து குடித்த ஒரு அரசியல்வாதி, ஐம்பது ஆண்டுகாலமாக மக்களோடு பின்னி பிணைந்த ஒரு தலைவரான கமல்ஹாசன் நேற்று ராகுல்காந்தியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி குறிப்பிடும்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து கமல்ஹாசனிடம் பேசி தெரிந்து கொண்டே என்றும் கூறியுள்ளார்.
எனக்கு திருநாவுக்கரசரை பார்க்கும்போது தான் பாவமாக உள்ளது. தமிழக நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள திருநாவுக்கரசர் தகுதி அற்றவர் என்று நினைத்து தான் ராகுல்காந்தி, கமல்ஹாசனிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் என்று நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தனக்கு தெரியாமலேயே ராகுல்-கமல் சந்திப்பு நடந்ததால் வெறுப்பில் இருக்கும் திருநாவுக்கரசருக்கு தமிழிசையின் கலாய்ப்பு கூடுதல் வருத்தத்தை கொடுத்திருக்கும் என்று கூறப்படுகிறது